57. அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் கோயில்
இறைவன் சத்தியவாகீஸ்வரர்
இறைவி சௌந்தரநாயகி
தீர்த்தம் காயத்திரி, கொள்ளிடம்
தல விருட்சம் ஆலமரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருஅன்பில் ஆலந்துறை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'அன்பில்' என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து சுமார் 8 கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 12 கி.மீ. லால்குடி இரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Anbil Gopuramவாகீச முனிவர் வழிபட்ட தலமாதலால் இத்தலத்து மூலவர் 'சத்தியவாகீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்.

மூலவர் 'சத்தியவாகீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'சௌந்தரநாயகி' என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

இக்கோயிலில் உள்ள விநாயகரின் திருநாமம் செவி சாய்த்த விநாயகர். நமது குறைகளை அவர் செவிசாய்த்துக் கேட்பதாக ஐதீகம். பிரம்மா வழிபட்ட தலம்.

இத்தலத்தில் இருந்து சுமார் 3 கீ.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் ஆனாய நாயனாரின் அவதாரத் தலமாகும். இவ்வூர் மங்கலவூர் என்றும் அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com